உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., இளைஞரணிக்கு இன்று ஐ.டி., கார்டு வழங்கல்

தி.மு.க., இளைஞரணிக்கு இன்று ஐ.டி., கார்டு வழங்கல்

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 'இல்லந்தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு, ஈரோடு - பெருந்துறை சாலை, மேட்டுக்கடை தங்கம் மஹாலில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, முதற்கட்ட உறுப்பினர் உரிமை சீட்டை வழங்க உள்ளார். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை வகிக்கிறார். எம்.பி., பிரகாஷ், இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் சீனிவாசன், ஜோயல், இன்பா, ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரபு, ராஜா, ஆனந்தகுமார் முன்னிலை வகிக்கின்றனர். அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை