உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானியில் 5ம் சுற்றுக்கு நீர் திறக்க சாத்தியமில்லை

கீழ்பவானியில் 5ம் சுற்றுக்கு நீர் திறக்க சாத்தியமில்லை

ஈரோடு: கீழ்பவானி பாசனத்தில், ஐந்தாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாத சூழல் உள்ளதாக, விவசாய பிரதிநிதிகளிடம், தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனம், 2ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் ஐந்தாம் நனைப்புக்கு மட்டும் தண்ணீர் தர நீர் வளத்துறை அறிவித்தது.அணையில் நீர்மட்டம் குறைந்ததால், நான்காம் நனைப்புக்கே இரு நாட்கள் முன்னதாக நிறுத்தி, ஐந்தாம் நனைப்புக்கு தண்ணீர் தர இயலாது என கைவிரித்தனர். அதேசமயம் ஐந்தாம் நனைப்புக்கு தண்ணீர் திறக்க, ஒரு தரப்பு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக கோவை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கத்தை, கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு நிர்வாகிகள் ராமசாமி, பொன்னையன், பெரியசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.தலைமை பொறியாளர் தரப்பில், 'தற்போதைய சூழலில் நீர் மின் அணைகளில் இருந்து தண்ணீர் எடுத்து, கீழ் பவானி பாசன தேவைக்கு தண்ணீரை கொண்டு சேர்க்க வாய்ப்பில்லை.கூட்டு குடிநீர் திட்டங்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதே பெரும் சிக்கலாக உள்ளது. எனவே, கீழ்பவானி வாய்க்காலில் ஐந்தாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பது என்பது சாத்தியமில்லாததது' என தெரிவித்துள்ளார்.நீர் திறக்க கோரி தர்ணாபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு, ஐந்தாம் சுற்றுக்கு தண்ணீர் இல்லை என நீர்வளத்துறையினர் நேற்று அறிவித்தனர். இதனால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர் வளத்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கீழ்பவானி விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர்கள் செங்கோட்டையன், ரவி, சுதந்திரராசு முன்னிலையில் நேற்று மாலை தர்ணாவில் ஈடுபட்டனர். நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் உதயகுமார், ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் பிரகலாதன் பேச்சுவார்த்தை நடத்தி, 'அணையில் தண்ணீர் இல்லாததால், தற்போதைய நிலையில் தண்ணீர் வழங்க இயலாது,' என்றனர். இதனால் விவசாயிகள் இரவிலும் தர்ணாவை தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை