உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அவங்களே பரவாயில்லை கம்மியா தான் அடிச்சாங்க

அவங்களே பரவாயில்லை கம்மியா தான் அடிச்சாங்க

தாராபுரம்: தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் நேற்று பேரணி நடத்தினர். இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை மாநாடு, வட்டக்கலை தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் பேசிய தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஞானசேகரன், 'பரவால்ல, அவங்களே பரவாயில்லை, ரொம்ப கம்மியா தான் அடிச்சாங்க; நீங்க ஒரேடியா அடிக்கிறீங்களே.. ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு இப்ப மாறுபட்ட பேச்சு பேசுறீங்களே' என அதிருப்தியை கொட்டினார். மாநாட்டில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி