உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய களவாணி கைது

ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய களவாணி கைது

ஈரோடு;சிவகிரி, பட்டேல் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 36; பெங்களூரு கல்லுாரி பேராசிரியர். சிவகிரியில் இருந்து ஈரோடு ஜி.ஹெச்.,சுக்கு தனியார் டவுன் பஸ்சில் நேற்று வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில் மொபைல் போன், ஆப்பிள் ஐ-பேடு வைத்திருந்தார். இதுகுறித்து ஜி.ஹெச்., போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், கொடுமுடி, சோளிகாளிபாளையம் ரோடு கறிக்கடை வீதியை சேர்ந்த ரங்கராவ் மகன் ராமச்சந்திரன், 20, என்பவரை கைது செய்தனர். மொபைல் போன், ஐ-பேடை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமச்சந்திரனை, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை