உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை கொங்கு மெட்ரிக் 37ம் ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி

பெருந்துறை கொங்கு மெட்ரிக் 37ம் ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி

பெருந்துறை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 100 சதவீதம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது. பள்ளி மாணவி அக்சயா, 500க்கு, 498 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவர் விக்னேஷ்வர், 493 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடம், ஷமிக்ஷா, பரணிதரன், கனிஷ்கா ஆகியோர், 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்டனர்.இப்பள்ளி, 37 ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. தேர்வு எழுதிய 181 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 475 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 75 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 125 பேரும் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் மூன்று பேர் சென்டம், கணிதத்தில் எட்டு பேர், அறிவியலில் இருவர், சமூக அறிவியல் ஒருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: பத்தாம் வகுப்பில், 485 மதிபெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மேல்நிலை வகுப்புகளில் கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம். அதேசமயம் சிறந்த பாட வல்லுனர்களால் பள்ளியில் தினமும் நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற்போது பிளஸ் ௧ சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு கூறினர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரிய-ஆசிரியை, முதல்வர் முத்து சுப்பிரமணியன் ஆகியோருக்கு, பள்ளி தலைவர் யசோதரன், தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் குமாரசாமி, இணை செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாக குழுவினர் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்