உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை கிராமத்துக்கு தண்ணீர் டேங்க் அமைத்த போலீசார்

மலை கிராமத்துக்கு தண்ணீர் டேங்க் அமைத்த போலீசார்

தாளவாடி, ஜதாளவாடி மலையில் சோளகர் தொட்டி கிராமத்தில், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரோடு மாவட்ட காவல் துறை, மாவோயிஸ்ட் நக்சல் தடுப்பு பிரிவு, தாளவாடி போலீசார் சார்பில், 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டது. மக்களின் பயன்பாட்டுக்காக சத்தி டி.எஸ்.பி., சரவணன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களிடம் நக்சல், மாவோயிஸ்டுகள் பற்றியும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, குழந்தை திருமணம் குறித்தும், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ