உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மச்சானை தாக்கிய ரவுடிக்கு காப்பு

மச்சானை தாக்கிய ரவுடிக்கு காப்பு

பவானி:திருப்பூர், சுப்பிரமணியன் நகரை சேர்ந்தவர் அனந்தபிரபு, 28; பவானி, ஊராட்சிக்கோட்டையில் உள்ள தன் தங்கை மகேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகேஸ்வரிக்கும், அவரது கணவர் விஜயனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அனந்தபிரபு தடுத்தபோது, உன்னால்தான் சண்டை ஏற்படுகிறது என கூறிய விஜயன், கட்டையால் கை மற்றும் தலையில் அனந்தபிரபுவை தாக்கியுள்ளார். அனந்தகுமார் புகாரின்படி பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.விஜயனை நேற்று கைது செய்த போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விஜயன் மீது, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை