உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரும்பள்ளம் ஓடையில் சீரமைப்பு பணி ஆய்வு

பெரும்பள்ளம் ஓடையில் சீரமைப்பு பணி ஆய்வு

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியில், 200 கோடி ரூபாய் மதிப்பில், கதிரம்-பட்டி காரப்பாறையில் இருந்து காவிரி ஆறு வரை பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்கும் பணி, 2019 முதல் நடந்து வருகிறது. ஆறு பகுதிகளாக நடக்கும் சீரமைப்பு, மேம்படுத்தும் பணிகளில், நான்கு கட்டப்பணி நிறைவடைந்து விட்டது. மீதி இரு பகுதி-களில் தற்போது பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநக-ராட்சி ஆணையாளர் மணீஷ், பெரும்பள்ளம் ஓடையில் நடக்கும் பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இன்னும் மூன்று மாதத்துக்குள் பணியை முடிக்க அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் சண்முக-வடிவு, உதவி செயற்பொறியாளர் பிச்சைமுத்து, உதவி பொறி-யாளர் சோமசுந்தரம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை