உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்தவர் விவேக், 27; கோவையில் உள்ள தனது டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் மற்றும் நண்பர்களுடன், தாராபுரத்தை அடுத்த மாம்பாறை முனியப்பசுவாமி கோவிலில் நேற்று நடந்த கிடா வெட்டுக்கு வேனில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து அதே வேனில் திரும்பினர். கிருஷ்ணாபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் விவேக், கோவையை சேர்ந்த வினோத்குமார், 26, ஜல்லிபட்டியை சேர்ந்த மோகன், 23, நாரணாபுரத்தை சேர்ந்த விக்னேஷ், 29, ஓட்டுனர் ஜெயபிரதாப், 35, உள்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை