உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காரில் லேப்டாப் திருட்டு

காரில் லேப்டாப் திருட்டு

பெருந்துறை, பவானியை அடுத்த பெரியபுலியூர், பூலபாளையம், விநாயகா வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 47; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். குமாரபாளையத்தில் இருந்து பெருந்துறை சிப்காட்டுக்கு, நிறுவன பங்குதாரர் ஒருவருடன் காரில் வந்தார். சோளிபாளையத்தில் ஒரு ேஹாட்டல் முன் காரை நிறுத்தி விட்டு, சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, காரின் வலது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காரில் இருந்த இரண்டு லேப்டாப், பேங்க் லாக்கர் கீ மற்றும் காருக்குரிய ஆவணங்கள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை