உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேறும், சகதியுமாக மாறிய வ.உ.சி. காய்கறி மார்க்கெட்

சேறும், சகதியுமாக மாறிய வ.உ.சி. காய்கறி மார்க்கெட்

ஈரோடு:ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் பெரிய காய்கறி மார்க்கெட், சேறும், சகதியுமாக காட்சி அளிப்-பதால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஈரோடு வ.உ.சி. மைதானத்தில், நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பல்வேறு இடங்களில் இருந்து காய்க-றிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் மழையால், மார்க்கெட்-டுக்குள் உள்ள நடைபாதை பகுதி சேறும், சகதியுமாக காட்சிய-ளிக்கிறது. காய்கறி வாங்க வருவோர் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் வழுக்கி விழுந்து அடிபடுகின்றனர்.காய்கறி மூட்டைகளை கடைக்கு எடுத்து செல்ல, வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். வெளியூரிலிருந்து வரும் சில்லரை வியாபா-ரிகள் காய்கறிகளை, தாங்கள் கொண்டு வந்த மினி ஆட்டோவில் ஏற்றிச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இவை தவிர, மார்க்கெட் முன்பகுதியில் சுற்றுச்சுவர் அருகில் காய்கறி கழிவு கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, சேறும், சகதியுமாக உள்ள மார்க்கெட்டை சரிசெய்ய, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொது மக்களும் எதிர்பார்க்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை