ஈரோடு, : மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதுபற்றி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில், வணிக அமைப்புகள், விவசாய சங்கங்கள், பொது அமைப்புகள் கூறிய பல்வேறு கருத்துக்கள்:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்ட-மைப்பு பொதுச் செயலாளர் ரவிசந்திரன்: மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததும், பங்கு சந்தையில் மிகப்-பெரிய சரிவை சந்தித்துள்ளதை கவனிக்க வேண்டி உள்ளது. சந்தை எப்படி உள்ளது என்பதையே, இந்த பட்ஜெட் எப்படி உள்ளது என்பதற்கான குறியீடாக எடுத்து கொள்ளலாம். கடந்த காலங்களில் பட்ஜெட் தாக்கல் செய்ததும், சந்தை விலை ஏற்றம் கண்டது. இந்த பட்ஜெட் தேசத்துக்கானதா; பீகார், ஆந்திராவுக்கா-னதா என தெரியவில்லை. ஆந்திராவுக்கு, 15,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். பீகார் சாலை மேம்பாட்டுக்கு, 27,000 கோடி, மின் உற்பத்திக்கு, 21,000 கோடி ரூபாய், கிராமப்புற சாலை உத-விக்கு, 11,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். அவர்களுடன் கூட்டணியில் உள்ளவர்களுக்கு அதிகம் ஒதுக்கி உள்ளனர். வரு-மான வரியில் மிகச்சிறிய அளவில் இலக்குகளை அறிவித்துள்-ளனர். உச்சபட்ச வருமான வரி, 30 சதவீதத்தில் இருந்து, 25 சத-வீதமாக குறைக்க வேண்டும் என்பதை குறைக்கவில்லை. மக்-களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்.ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்க முன்னாள் தலைவர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் திருமூர்த்தி: முத்ரா கடன், 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சமாக அதிகரித்தது பயன் தரும். நாடு முழு-வதும், 12 தொழில் பூங்காக்கள் துவங்குவதால், தொழில் வளரும். வேலைவாய்ப்பு ஏற்படும். வருமான வரியில் 'ஸ்டேட்-டார்டு டிடக் ஷன்', 50,000 ரூபாயில் இருந்து, 75,000 ரூபாயாக உயர்த்தியது சிறப்பு. பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதி அமைப்பது பலன் தரும். சிறு குறு தொழில்களின் கடன், வட்டி விகிதாச்சாரம், சலுகைகள், திட்ட சலுகைகள் போன்ற சலு-கைகள் எதிர்பார்த்தோம். எம்.எஸ்.எம்.இ., துறையில் அதிக திட்-டங்கள் அறிவிக்கப்படவில்லை.தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளன மாநில இணை செயலாளர் தர்மராஜ்: மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு சுங்க கட்டணம், 6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளதை வரவேற்கலாம். எங்கள் கோரிக்கை, மொத்த-மாக, 6 சதவீதத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதாகும். ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தும்போது, சுங்க கட்டணம், 10 சதவீ-தமாக இருந்தது. பின், படிப்படியாக உயர்ந்து, 15 சதவீதமாகி, தற்போது, 6 சதவீதம் குறைத்துள்ளனர்.இதில், அக்ரி செஸ், 1 சதவீதமாகும். முதலீட்டுக்காக தங்கம், வெள்ளியை கட்டியாக வாங்கும்போது, பயன் தரும். ஜி.எஸ்.டி.,க்கு முன் வாட் வரி இருந்தபோது, கொலுசு, மெட்டி, தாலிக்கொடி போன்ற ஆபரணங்கள், 8 கிராமுக்கு உட்பட்டு இருந்தால், வரி விலக்கு அளித்தனர். ஜி.எஸ்.டி., வந்தபின், வரி விதிப்பு விலக்கு நீக்கப்பட்டது. மீண்டும் வரி விலக்கு வேண்டும் என கோரியும், அறிவிப்பு இல்லை.தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி: விவ-சாய கமிஷன் அமைக்க பல ஆண்டு கோரியும், அறிவிப்பில்லை. வேளாண் துறைக்கு, 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது, இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அறிவிப்பை வரவேற்கலாம்.எண்ணெய் வித்துக்கள், 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகி-றது. விவசாயத்தை அடிப்படையான கொண்ட நாட்டில், விளை பொருளை ஏற்றுமதி செய்து, அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு பதில், இறக்குமதி செய்வது தேசிய அவமானம். விளை பொருட்-களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்பதைவிட முதலீட்டு செலவை கணக்கிட்டு, அதில் சரி பாதி லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக இந்த பட்-ஜெட்டால் விவசாயிகளுக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஏமாற்றமும் இல்லை.கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி: வேளாண் துறைக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நெல், கோதுமை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் என, 21 வகை வேளாண் உற்பத்தி பொருட்க-ளுக்கு மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதரவு, உற்பத்தி செலவில் இருந்து, 20 சதவீதம் அதிகரித்து வழங்கப்பட்டு கொள்-முதல் செய்வதை உறுதி செய்கிறது.கடுகு, எள், சூரியகாந்தி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொ-கையும், குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதலும் செய்-யப்படும் என்பது சிறந்தது. செயற்கைக்கோள், டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடு அறிவிப்பை வரவேற்கலாம். இயற்கை விவசாயத்துக்கு, 1 கோடி பேருக்கு பயிற்சி, செயல்மு-றைப்படுத்த வசதி ஏற்படுத்தப்படும்.கரும்பு ஆலைகளில் இருந்து நியாயமான சந்தை விலை கொடுத்து, எத்தனாலை வாங்கி வாகன எரிபொருளாக பயன்ப-டுத்தும் திட்டம் அறிவிப்புடன் நிற்கிறது. இறக்குமதி சமையல் எண்ணெய் மானியங்களை குறைத்து, உள்ளூர் எண்ணெய்களுக்கு மானியம் அதிகரிக்கலாம்.தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினர் பாஷா: ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு, புதிய ெதாழில் நுட்ப வசதி, அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு இல்லை. ரயில் விபத்தை தடுப்பது, புதிய ரயில்வே ஸ்டேஷன்கள் இயக்கம் பற்றி தகவல் இல்லை.கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மற்றும் இயக்க துாரம் குறைக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கும் அறிவிப்பு இல்லை.கொங்கு மண்டல ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் விரிவாக்கம், புதிய ரயில் இயக்கங்கள் பற்றி அறிவிப்பு இல்லாதது, ஏமாற்றம் தருகிறது.