உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெயரளவுக்கு கூட்டம் நடந்தால் எப்படி? குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., கவலை

பெயரளவுக்கு கூட்டம் நடந்தால் எப்படி? குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., கவலை

ஈரோடு : ஈரோடு கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., (பொறுப்பு) மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா முன்னிலை வகித்தார்.கூட்ட விவாதம் வருமாறு:சமூக ஆர்வலர் முகிலன்: கடந்த கூட்டத்தில், 12 துறை சார்ந்த, 40 மனு வழங்கினேன். ஒரு மனுவுக்கு கூட பதில் தரவில்லை. பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலு-வலகத்தில் ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி கலந்தாய்வு கூட்-டத்தை முறையாக நடத்த வேண்டும். கடந்த கூட்டத்தில் அங்கு நடந்த பிரச்னை தொடர்பாக, 42 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்: காளிங்க-ராயன் வாய்க்காலை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு-களை அகற்ற வேண்டும். ஈரோடு பகுதியில் உள்ள பேபி வாய்க்-காலை முழுமையாக துார்வாரி, கழிவு நீர், காளிங்கராயன் வாய்க்-காலில் கலப்பதை தடுக்க வேண்டும். வாய்க்காலை ஒட்டி அமைந்துள்ள சாய, சலவை, தோல் ஆலைகளை, 5 கி.மீ.,க்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும்.மாநகர் மாவட்ட அ.தி.மு.க., விவசாய பிரிவு செயலாளர் தங்-கவேல்: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா பகுதியில், நில அளவீடு செய்து, கீழ்பவானி பாசனப்பகுதி நிலங்கள், வீட்டு-மனை, பாதை, ஓடை நில ஆக்கிரமிப்புகளை பிரித்து, ஆக்கிர-மிப்பை அகற்ற வேண்டும். அனைத்து பகுதிகுளம், குட்டைக-ளை அளவீடு செய்து, வேலி அமைக்க வேண்டும்.ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ராம்குமார்: இக்கூட்டங்களில் பெறப்-படும் மனுக்களுக்கு, அடுத்த கூட்டம் நடக்கும் முன், 15ம் தேதிக்குள் மனுதாரருக்கு உரிய பதில் தாருங்கள். இக்கூட்டத்-துக்கு பொதுப்பணி, நீர் வளத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அறநிலையத்துறை, நெடுஞ்சாலை துறை என பல துறையினர் வரவில்லை. மனு தொடர்பாக பேசவும், தீர்வு காணவும் முடியவில்லை. வரும் கூட்-டங்களில் அனைத்து துறையினரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பெயரளவில் நடக்காமல், அதிக மனுக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை