ஈரோடு: ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர்.ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், டவுன் பஞ்.,கள், பஞ்சாயத்துக்களில் மகளிர் குழு, கான்ட்ராக்ட், அவுட்-சோர்சிங், தினக்கூலி, தொகுப்பூதியம் என பல பெயர்களில் பணி-யாற்றும் நிரந்தரமற்ற தொழிலாரள்களுக்கு, குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் நிர்ணயித்து, முன்தேதியிட்டு அமலாக்க வேண்டும். உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து, 7 ஆண்டுகள் ஆகிவிட்டதால், குறைந்-தபட்ச ஊதியத்தை மாதம், 26 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் உயர்த்தி வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் துாய்மை பணிகள், குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணி-களை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கக்கூடாது. தனியாரிடம் வழங்கும் அரசாணை, ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளே, அடிப்படை சேவை பணி-களை நேரடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர்.திருப்பூர் எம்.பி., சுப்பராயன் வந்திருந்து, இக்கோரிக்கை குறித்து பேசினார். பின், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், இக்கோ-ரிக்கை குறித்து வலியுறுத்தினார். இதுபற்றி, அரசுக்கு தெரிவிப்ப-தாக கலெக்டர் தெரிவித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்-தனர்.