உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர்கள் பங்கேற்காத பொது மாறுதல் கலந்தாய்வு

ஆசிரியர்கள் பங்கேற்காத பொது மாறுதல் கலந்தாய்வு

ஈரோடு: ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு, நகராட்சி உயர் மற்றும் மேல்நிலை பள்ளி கலை ஆசிரியர், இசை ஆசிரியர், தையல் ஆசிரியர், இடை நிலை ஆசிரியர் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, நேற்று கலந்தாய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் யாரும் விண்ணப்பிக்காததால், ஒருவர் கூட பங்கேற்கவில்லை.இந்நிலையில் அரசு, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வருவாய் மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதற்கு, 700 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஒரே நாளில் அனைவருக்கும் கலந்தாய்வு நடத்த இயலுமா? என கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை