உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிறைவு பெற்ற அக்னி நட்சத்திரம்; குறையாத வெப்பத்தால் கலக்கம்

நிறைவு பெற்ற அக்னி நட்சத்திரம்; குறையாத வெப்பத்தால் கலக்கம்

ஈரோடு : வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு கடந்த பிப்., முதல் ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டத்துவங்கியது. மார்ச் இறுதி முதல் மே, 5 வரை, 110 டிகிரி வரை வெயில் வாட்டியது. மே, 4ல் அக்னி நட்சத்திரம் துவங்கிய பின், தென் மாவட்டங்களில் மழை பெய்தாலும், ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதி, அதை ஒட்டிய பகுதியில் மட்டுமே கனமழை பெய்தது. நம்பியூர், கோபி, அந்தியூர், கடம்பூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், சில நாட்களிலேயே மழை குறைந்தது.ஆனால் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி உட்பட பல பகுதிகளில் ஆரம்பம் முதல் லேசான மழை, வெப்பமுமாக நகர்ந்து, அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்தது.அக்னி நட்சத்திரம் நேற்று குறைந்தாலும், மூன்று நாட்களாகவே கடும் வெயில், வெப்பம் நிலவுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பருவமழை துவங்கினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பதால், மக்கள் பருவமழையை எதிர் நோக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை