| ADDED : ஜூலை 31, 2024 07:23 AM
ஈரோடு: பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவல-கத்தில் நடக்கும் கலந்தாய்வு அமர்வு முறையாக நடப்பதில்லை. கூட்ட அரங்கை அலுவலக அறையாக மாற்றியதை கண்டித்தும், இது தொடர்பாக போராட்டம் நடத்தி கைதான, 42 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி ஆக., 5ல் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன் போராட்டம் நடத்த அறிவிப்பு செய்தனர்.இந்நிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில், நலச்சங்கம், சிப்காட் தொழிற்-சாலை உரிமையாளர்கள் சங்கம், சிப்காட் ஜவுளி ஆலை உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்-வேறு அமைப்புகள், அதிகாரிகள் பங்கேற்ற பேச்-சுவார்த்தை நடந்தது.இதில், கலந்தாய்வு கூட்டங்களில் சிலர் தவறாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.கோரிக்கைகளை நிறைவேற்ற அனைவரும் ஒத்-துழைக்க வேண்டும். நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான இடத்தை கலெக்டர் அறிவிப்பார். 42 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது பற்றி போலீஸில் பேசி விட்டு அறிவிக்கப்படும்.ஆக., இறுதிக்குள் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும். சிப்காட் வளாகத்தில் கலப்பு உப்பு, 60,000 டன் அகற்ற நட-வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைய-டுத்து ஆக., 5ம் தேதி நடப்பதாக அறிவித்த போராட்டம் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.