உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்ரித் பாரத் திட்ட பணிகள் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

அம்ரித் பாரத் திட்ட பணிகள் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர், அம்ரித் பாரத் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், பிரதமர் மோடியின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.29 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்ட பணிகள் முடிந்த பின், மாடல் ரயில்வே ஸ்டேஷனாக ஈரோடு விளங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அம்ரித் பாரத் திட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ஈரோட்டில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வு ஒரு மணி நேரம் தொடர்ந்தது. தனி சிறப்பு ரயில் மூலம் வந்த பொது மேலாளர், பின்னர் அதே ரயிலில் கிளம்பி சென்றார். திட்ட பணிகளை விரைவாகவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் இருக்க, பொது மேலாளர் அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை