உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் காவலாளி மீது தாக்குதல் ஈரோடு அருகே கும்பல் அட்டகாசம்

கோவில் காவலாளி மீது தாக்குதல் ஈரோடு அருகே கும்பல் அட்டகாசம்

ஈரோடு:நட்டாற்றீஸ்வரர் கோவில் காவலாளியை மர்ம கும்பல் கல்லால் தாக்கியதில், படுகாயம் அடைந்தார்.மொடக்குறிச்சி தாலுகா காங்கேயம் பாளையத்தில் நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று மாலை வழக்கம் போல், 6:00 மணிக்கு கோவில் பூட்டப்பட்டது. காவலாளி கிருஷ்ணன், 42, மட்டும் இருந்தார். 6:30 மணிக்கு கோவில் பகுதிக்கு வந்த, 10 பேர் கும்பல், அவருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கல்லால் காவலாளியின் நெஞ்சு, கைகளில் தாக்கினர். இதில் கிருஷ்ணன் காயமடைந்தார். அங்கிருந்த சேர்களை உடைத்து சேதப்படுத்தினர். காவலாளிக்கு உதவி செய்ய வந்த உள்ளுர்வாசிகள் இருவரையும் தாக்க முயலவே அவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து சென்றது. கும்பல் சென்ற பிறகு காவலாளியை மீட்ட அப்பகுதி மக்கள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் குறித்து, மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை