உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அண்ணனை கொலை செய்த அண்ணி பெருந்துறை போலீசில் தம்பி புகார்

அண்ணனை கொலை செய்த அண்ணி பெருந்துறை போலீசில் தம்பி புகார்

பெருந்துறை, நாகை மாவட்டம் பெருக்கம் கடம்பூனுார், புள்ளான்தோப்பு வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 37; இவரின் மனைவி அதே பகுதியை சேர்ந்தவர் பரிமளா, 33; இருவரும் நாகப்பட்டினத்தில், 14 ஆண்டுகளுக்கு முன் கேட்டரிங் படித்தபோது பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு முன், பெருந்துறை சிப்காட்டை அடுத்த காசிபில்லாம்பாளையத்துக்கு வந்தனர். வீடு எடுத்து தங்கினர். ஸ்ரீதர் சமையல் வேலைக்கு சென்று வந்தார். குடிப்பழக்கமும் உண்டு. காசிபில்லாம்பாளைத்தில் ஸ்டுடியோ மற்றும் பொது சேவை மையத்தை பரிமளா நடத்தி வருகிறார். உறவினர் இறப்புக்காக ஊருக்கு நேற்று முன்தினம் சென்ற பரிமளாவிடம், ஸ்ரீதர் தம்பி புகழேந்தி, அண்ணன் எங்கே என்று கேட்டுள்ளார். கேரளா சென்று விட்டதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்து மேலும் விசாரித்தபோது, 'ஒரு வாரத்துக்கு முன் ஸ்ரீதர் குடிக்க பணம் கேட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில், தள்ளி விட்டதில் கீழே விழுந்த ஸ்ரீதர் இறந்து விட்டார். தனக்கு தெரிந்த கார்த்திகேயன் என்பவர் உதவியுடன், உடலை பைக்கில் வைத்து எடுத்து சென்று, வாய்க்கால் மேடு அருகில் புதரில் வீசி விட்டேன் ' என்று கூறியுள்ளார். இதுகுறித்து பெருந்துறை போலீசில், புகழேந்தி புகார் அளித்துள்ளார். அதில் அண்ணி பரிமளா, அவருக்கு உதவிய கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். மேலும், அண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், வாய்க்கால் மேடு அருகில் புதரில் வீசப்பட்ட ஸ்ரீதர் உடலை நேற்று மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவாகி விட்ட பரிமளா, கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை