| ADDED : டிச 05, 2025 10:05 AM
கோபி: கோபி, வாய்க்கால்ரோடு அருகே எல்.ஐ.ஜி., காலனியை சேர்ந்தவர் விஜயக்குமார், 40. பழைய இரும்பு வியாபாரி; இவரது மனைவி கன-கமணி, 35; தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் மதியம் விஜயக்குமார் உடலில் காயங்களுடன், வீட்டுக்குள் கொலை-யுண்டு கிடந்தார். கோபி போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயக்குமாருக்கும், அவரின் மைத்துனரான செந்தில்குமாருக்கும், 45, பணம் கொடுக்கல், வாங்குவது சம்பந்தமாக பிரச்னை இருந்துள்ளது. இதனால் செந்தில்குமாரோ அல்லது வேறு யாராவது முன்விரோதத்தில் குத்தி கொலை செய்திருக்கலாம் என விஜயக்குமாரின் சகோ-தரர் கொண்டப்பன், கோபி போலீசில் புகார-ளித்தார். இதன் அடிப்படையில் கோபி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, மைத்துனரான செந்தில்குமாரை பிடித்து விசாரிக்கின்றனர்.