உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகளுக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தை மீது வழக்கு

மகளுக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தை மீது வழக்கு

சென்னிமலை: சென்னிமலை அருகே சரவண நல்லுாரை சேர்ந்த பெண், கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்து, 33 வயது ஆண் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவ-ருக்கு பிறந்த, 16 வயது மகளுடன் (பிளஸ் ௧ மாணவி) வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வங்கி கடன் விஷயமாக அவர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டுக்கு வந்த கணவர், தனியாக இருந்த வளர்ப்பு மகளிடம் அத்துமீறி நடந்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து தாய்க்கு மொபைலில் மாணவி தகவல் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு, சென்னிமலை போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் வளர்ப்பு தந்தை மீது, போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்-பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை