உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடச்சூர் கோவிலில் 10 ஆண்டில் ரூ.11.24 லட்சம் காணிக்கை வசூல்

மொடச்சூர் கோவிலில் 10 ஆண்டில் ரூ.11.24 லட்சம் காணிக்கை வசூல்

கோபி : மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், 10 ஆண்டுகளில், 11.24 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில், தீ மிதி விழா நடக்கிறது. கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, நிரந்தர உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மூன்று முறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, 2014 முதல் தற்போது வரை பத்தாண்டுகளில், 11.24 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை