உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் உண்டியலில் ரூ.13.36 லட்சம் வசூல்

பாரியூர் உண்டியலில் ரூ.13.36 லட்சம் வசூல்

கோபி: கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோவில்களுக்கு சொந்தமான உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், 95 கிராம் தங்கம், 223 கிராம் வெள்ளி மற்றும் அரபு நாட்டின் பத்து திராம் ஒரு நோட்டு காணிக்கை செலுத்தியிருந்தனர். தவிர, 13.36 லட்சம் ரூபாய் பணம் கிடைத்-தது.கோபி யூனியன் பேங்க் ஆப் இந்திய வங்கியில், பாரியூர் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த பிப்.,7ல், உண்டியல் திறந்ததில், 22.65 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்ததாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி