உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர்கள் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி

டூவீலர்கள் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி

காங்கேயம்;திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம் அருகே முருகன்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 55, கட்டட மேஸ்திரி. நேற்று காலை, 9:30 மணிக்கு வேலை காரணமாக சந்திரசேகர் தனது ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் திருப்பூர் தாராபுரம் ரோடு, கொடுவாய் பாலாஜி பேக்கரி அருகே சென்றார்.அப்போது எதிரே வந்த டி.வி.எஸ்.,எக்ஸ்.எல்., மொபட் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சந்திரசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை