உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளர் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி 4 ரோட்டில், சி.ஐ.டி.யு., - ஈரோடு மாவட்டக்-குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட உதவித்தலைவர் முரு-கையா, ஜோதிமணி, ரகுராமன், மாரப்பன், ஸ்ரீதேவி உட்பட பலர் பேசினர்.திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசிய பணமாக்குதல் என்ற பெயரில், பொது சொத்-துக்களை தனியாரிடம் வழங்குவதை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக, 26,000 ரூபாயை உறுதி செய்து வழங்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரையும் அங்கீகரித்து, நிரந்-தர ஊழியர்களாக்க வேண்டும். அனைவருக்கும் காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்பு திட்-டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை