உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி; போலீசார் வழக்குப்பதிவால் தலைமறைவு

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி; போலீசார் வழக்குப்பதிவால் தலைமறைவு

பவானி: பவானி அருகே சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகியை, போலீசார் தேடி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில், சூதாட்ட கிளப் நடப்பதாக வந்த தகவலின்படி சித்தோடு போலீசார் சோதனை நடத்தினர்.ஒரு கிளப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 21, பெலிக்ஸ், 40, முகிலன், 22; சேலம் மாவட்டம் சங்ககிரி, கல்வ-டங்கம் கார்த்திக், 35; துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் புதுப்படி சிவக்குமார், 55; திருப்பூர் மாவட்டம் காங்கேயம் செந்தில்குமார், 47; ஈரோடு, வீரப்பன்சத்திரம் அப்துல் சலாம், 61; நாமக்கல் மாவட்டம் முருக செல்லபெருமாள் என எட்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த-போது, முருக செல்லபெருமாள் தப்பி ஓடி விட்டார்.போலீஸ் விசாரணையில், 'காலிங்கராயன் மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதும், தி.மு.க.,வை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலாளர் குமாரவடிவேல் என்பவ-ருக்கு, கிளப் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். குமாரவடிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரவடிவேல், முருக செல்லபெருமாளை தேடி வரு-வதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி