உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளையும் "ரிங் ரோடு பற்றி கலெக்டர் விசாரணை

வளையும் "ரிங் ரோடு பற்றி கலெக்டர் விசாரணை

ஈரோடு: ஈரோடு 'ரிங் ரோடு' திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து கலெக்டர் காமராஜ் விசாரணை நடத்தினார்.தி.மு.க., ஆட்சியின் போது ஈரோடு நகருக்கு 'ரிங் ரோடு' திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்காக பல முறை சர்வே நடத்தப்பட்டது. முதலில் நேராக செல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட 'ரிங் ரோடு' திட்டம், தி.மு.க., - காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களின் நிலங்களுக்கு சாதகமாக, பணம் பெற்றுக் கொண்டு, வளைந்து, நெழிந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, 'ரிங் ரோடு' ஊழல் எதிர்ப்பு இயக்கம், பரிசல்துறை, 46.புதூர், ஆனைகல்பாளையம், காசிபாளையம், ரங்கம்பாளையம், திண்டல் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் காமராஜ், அமைச்சர் ராமலிங்கத்திடம் மனு வழங்கப்பட்டது.'ரிங் ரோடு' ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில், முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க முடிவு செய்து, நேற்று முன்தினம் சென்னைக்கு பயணம் செய்ய பஸ்ஸில் ஏறினர். தகவல் அறிந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இப்பிரச்னை தொடர்பாக பேச நேரில் வரும்படி கலெக்டர் காமராஜ் அழைப்பு விடுத்தார்.அதன்படி, ஊர் பொதுமக்கள் சார்பில் ஈஸ்வரமூர்த்தி, அசோக்குமார், குப்புசாமி, தங்கராஜ், சின்னச்சாமி உள்பட பலர், நேற்று கலெக்டர் காமராஜை சந்தித்து, முறைகேடு குறித்து விளக்கினர்.அவர்கள் கூறியதாவது:முறைகேடு குறித்து தனியாக விசாரணை நடந்து வருவதாகவும், வளைந்து செல்லும் வகையில் ரிங் ரோடு திட்டம் தயாரிக்கப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவிக்கும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டார். அவரிடம் நாங்கள் விளக்கி கூறினோம். பத்து நாளில் நல்ல முடிவு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.தற்போது வளைந்து செல்லும் வகையில் எடுக்கப்பட்ட சர்வேயிலும் கூட, சிலரின் நிலங்களுக்கு ஆதரவாக திடீர் திடீர் என அதிகாரிகள் மாற்றம் செய்து வருகின்றனர். நேராக தயாரிக்கப்பட்ட ரிங் ரோடு திட்டத்தையே அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை