உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா

ஈரோடு வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா

ஈரோடு: ஈரோடு, வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரியில் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.இதில், 2019-2022ம் கல்வியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாளராக கோயம்புத்துார் பாரதியார் பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) முதுநிலை பேராசிரியர் முருக வேல் கலந்து கொண்டார். வேளாளர் கல்வி குழுமங்களின் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், பொருளாளர் அருண், இணை செயலாளர் ராஜமாணிக்கம், நிர்வாக உறுப்பினர் குலசேகரன், வேளாளர் மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி, வி.இ.டி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஸ் குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பட்டமளிப்பு விழாவை தாளாளர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். முதல்வர் முனைவர் நல்லசாமி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பாரதியார் பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) முதுநிலை பேராசிரியர் முருகவேல் பட்டமளிப்பு விழாவில் பேசுகையில்,' எதிர்கால சமூகத்தை வளமாக்க பொறுப்புடனும், கடமையுடனும் பட்டதாரிகள் செயல்பட வேண்டும்' என்றார்.சமூகவியல் துறை மாணவி லோகபிரபா பல்கலை அளவில் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். சமூகவியல் துறை மாணவி சுதர்சனா, பி.காம் சி.ஏ. மாணவி குஷி ஆகியோர் பல்கலை தர வரிசையில் முறையே இரண்டு, மூன்றாம் இடம் பெற்றனர். 124 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை