உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேக்கரி ஓனர் வீட்டில் தீ விபத்து

பேக்கரி ஓனர் வீட்டில் தீ விபத்து

கோபி:நம்பியூர் அருகே முதலியார் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; பேக்கரி கடை உரிமையாளர்; மனைவி மல்லிகாவுடன் நேற்று வழக்கம்போல் கடைக்கு சென்றார். அவர் வசிக்கும் ஓட்டு வீட்டில் இருந்து காலை, 7:30 மணிக்கு கரும்புகையுடன் தீ எரிந்தது. நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் டி.வி., கட்டில், மெத்தை, தட்டுமுட்டு சாமான்கள், துணிமணி எரிந்து நாசமானது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ