உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கசிவுநீர் குட்டையில் மூழ்கி மீனவர் பலி

கசிவுநீர் குட்டையில் மூழ்கி மீனவர் பலி

நம்பியூர், நம்பியூரை அடுத்த குருமந்துார் மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் கருப்புசாமி 54; மீனவர். இவரின் மனைவி லட்சுமி. தம்பதியரின் மகன் செல்லமுத்து. கருப்புசாமி தனது உறவினருடன் கூட்டாக சேர்ந்து, நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான குருமந்துார் மூலப்பாளையம் பாப்பாகாடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலை ஒட்டிய கசிவு நீர் குட்டையை ஏலம் எடுத்து மீன் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.நேற்று மாலை, 4:30 மணி அளவில் மீன்களுக்கு அழுகிய பழங்களை இரையாக போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார். நம்பியூர் போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி