ஈரோடு:சத்தியமங்கலம்
ரீடு தொண்டு நிறுவனம் சார்பில், பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி
உதவித்தொகை, 2.48 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.ரீடு தொண்டு
நிறுவனம், கடம்பூர், ஆசனூர் சுற்றுவட்டார கிராம பழங்குடியின
குழந்தைகளுக்கு, தொடர் கல்வியில் உதவி செய்ய 'பழங்குடியினர் வள
மையம்' நிறுவி, கூடுதல் கல்விப் பயிற்சி, ஊட்டச்சத்து சிற்றுண்டி, கிராம
மக்களின் அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்ட உதவி பெற்றுத்தரும்
பணிகளையும் செய்து வருகிறது. இதன்படி கடம்பூர், ஆசனுார்
பழங்குடியினர் குழந்தைகளுக்கு, கல்வியை தொடர உதவித்தொகை
வழங்கப்பட்டது. குன்றி மலை கிராமத்தில், 78 பேர் பங்குபெற்ற
நிகழ்ச்சியில், 22 பேருக்கு தலா, 2,000 ரூபாய் வீதம் 44,000 ரூபாய்;
ஆசனுாரில், 52 மாணவர்களுக்கு தலா, ரூ.2,000 வீதம், 1.04 லட்சம் ரூபாய்;
தலமலையில், 2௨ பேருக்கு தலா, ரூ.2,000 வீதம் 44,000 ரூபாய்; கெத்தேசால்
மலை கிராமத்தில், 2௮ பேருக்கு தலா, ரூ.2,000 வீதம், 56 ரூபாய் என, 124
மாணவர்களுக்கு, 2.48 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில்
அந்தந்த பகுதி கிராம தலைவர்கள், பழங்குடியினர் நல தலைவர்கள், சமூக
ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மக்கள் கலந்து கொண்டனர். ரீடு
நிறுவன இயக்குனர் கருப்புசாமி விழாவை தலைமையேற்று நடத்தினார்.