உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கண்காட்சி

கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கண்காட்சி

சென்னிமலை: -சென்னிமலை அருகே மயிலாடி ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், கைத்தறித்துறை மற்றும் கைத்தறி ரக அம-லாக்கத் துறை சார்பில், கைத்தறி ரக ஒதுக்கீடு பற்றிய விழிப்பு-ணர்வு கூட்டம், கைத்தறி துணி கண்காட்சி நடந்தது. பாலி-டெக்னிக் முதல்வர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். கைத்தறி துறை சார்பாக கைத்தறி அலுவலர் மாலதி, கைத்தறி ஆய்வாளர் பூமதி முன்னிலை வகித்தனர். கைத்தறிக்கு என பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கப் பட்டுள்-ளன. இவற்றை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது தண்டனைக்-குரிய செயலாகும் என, விழிப்புணர்வு செய்யப்பட்டது. கைத்தறி துணியின் சிறப்புகள் குறித்தும் விளக்கினர். விழிப்புணர்வு மற்றும் கண்காட்சியில் சென்னிமலை சரக பிரதம கைத்தறி நெச-வாளர் கூட்டுறவு சங்க மேலாளர், விசைத்தறியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை