உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடி மாரியம்மன் கோவிலில் பூசாரி மட்டுமே தீ மிதிக்கும் விழா

தாளவாடி மாரியம்மன் கோவிலில் பூசாரி மட்டுமே தீ மிதிக்கும் விழா

சத்தியமங்கலம்: தாளவாடி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 26ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நேற்று காலை நடந்தது. கோவிலின் முன் பள்ளிவாசல் எதிரே அமைக்கப்பட்ட திருக்குண்டத்தில், பூசாரி சிவண்ணா மட்டும் நேற்று காலை குண்டம் இறங்கினார். இந்த கோவிலில் பூசாரி மட்டுமே தீ மிதிப்பது வழக்கம். இதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது.பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள இந்த கோவிலில், நுாற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு குண்டம் விழா நடந்து வருகிறது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை