உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்

மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 10 தாலுகாக்களிலும், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நேற்று துவங்கியது. கோபி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஜமாபந்தியை துவக்கி வைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார். ஈரோடு தாலுகா அலுவலகத்தில், ஈரோடு ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் ஜமாபந்தி பணியை மேற்கொண்டார். கோபி, சத்தி, பெருந்துறை தாலுகாவில் வரும், 17ம் தேதி வரை; அந்தியூரில், 26ம் தேதி வரை; பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களில் வரும், 25ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. தாளவாடியில் நேற்று மட்டும் ஜமாபந்தி நடந்தது. சனி, ஞாயிறு, திங்கள் நாட்களில் ஜமாபந்தி நடக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி