| ADDED : ஜூலை 25, 2024 01:19 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஏ.ஐ.டி.யு.சி., ஈரோடு மாவட்-டக்குழு தலைவர் சின்னசாமி தலைமையில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணி-யாற்றி வரும் நிரந்தரமற்ற தினக்கூலி பணியாளர்கள், மாநகராட்சி முதல் பஞ்., வரை பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், டெங்கு, மலேரியா நோய் தடுப்பு பணியாளர்கள், ஓட்டுனர்கள், அரசு மருத்துவமனையில் பணி செய்யும் துாய்மை பணியாளர்கள் உட்பட பல வகை தினக்கூலி, தொகுப்பூதிய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி கிடைப்பதில்லை. தற்போது தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர், விலைவாசி உயர்வின்-படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டுக்கு கடந்த ஏப்., 1 முதல் வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் இதுவரை நிர்ண-யிக்கப்படவில்லை. பல மாவட்டங்களில் நிர்ணயித்து அறிவித்-துள்ளனர்.எனவே கடந்த ஏப்., 1 முதல், 2025 மார்ச் 31 வரையிலான காலத்-துக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து, முன்தேதியிட்டு தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் படி உத்தர-விட வேண்டும். பல உள்ளாட்சி அமைப்புகள், பல்நோக்கு மருத்-துவமனை பணியாளர்கள் உட்பட பலருக்கு சம வேலைக்கு சம ஊதியம் என வழங்கப்படவில்லை. அவற்றையும் சீரமைத்து நிர்-ணயிக்க வேண்டும். பல பஞ்சாயத்துக்கள், நகராட்சி, டவுன் பஞ்.,களில், 2023-24ம் ஆண்டுக்கு கலெக்டரால் நிர்ணயிக்கப்-பட்ட குறைந்தபட்ச ஊதியம் கூட இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கும் உரிய ஊதியம் கிடைக்க வழி செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.