உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நெல் பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி முகாம்

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி முகாம்

ஈரோடு: பெருந்துறை, பாண்டியம்பாளையம் கிராமத்தில் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரி-வாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தில், நெல் பயிரில் ஒருங்கி-ணைந்த பண்ணை பயிற்சி முகாம் நடந்தது. பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் கலைசெல்வி தலைமை வகித்து, துறை சார்ந்த திட்டங்களை பெற விரும்பும் விவசாயிகள், சமர்-பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கினார்.வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் இளங்கோ, நெல் பயிரில் தோன்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் வகைப்பாடு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்-சிகள், அவற்றை இனங்கண்டறிதல் பற்றி விளக்கினார்.துணை வேளாண் அலுவலர் அருள்மொழிவர்மன், நெல் நுண்-ணுாட்டம் இடுவதன் அவசியம், துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் கிடங்கில் இருப்பில் உள்ள இடுபொருட்களின் மானிய விபரம் பற்றி பேசினார்.வேளாண் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவியர், செயல் விளக்கம் அளித்தும், வயலாய்வு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை