உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முறையற்ற பாசனதாரர்கள் நீர் எடுக்காதீர் வழக்கு பதியப்படும் என எச்சரிக்கை

முறையற்ற பாசனதாரர்கள் நீர் எடுக்காதீர் வழக்கு பதியப்படும் என எச்சரிக்கை

ஈரோடு:பவானிசாகர் அணையின் நீர் இருப்பு, கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாக உள்ளது. அணையில் இருந்து தற்போது தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் பவானி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.பவானிசாகர் அணையில் இருந்து பவானி காளிங்கராயன்பாளையம் வரை, பவானி ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளில் மின் மோட்டார் மூலம், பவானி ஆற்று நீரை எடுக்கும் முறையற்ற பாசனங்களை கட்டுப்படுத்த, ஈரோடு கலெக்டர், வருவாய் துறை, நீர் வளத்துறை, மின் வாரியத்துறை, போலீஸ் ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்துள்ளார் இக்குழு தினமும் பவானி ஆற்றின் இடது, வலது கரைகளில் தீவிர ரோந்து பணி மேற்கொள்வர். அப்போது கண்டறியப்படும் முறையற்ற பாசனதாரர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவர். இலவச விவசாய மின் இணைப்பும் துண்டிக்கப்படும் என, கலெக்டர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !