உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளிகளுக்கு கிளம்பிய இலவச பாட புத்தகம், நோட்டு

அரசு பள்ளிகளுக்கு கிளம்பிய இலவச பாட புத்தகம், நோட்டு

ஈரோடு : கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 6ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க, பாட புத்தகங்கள், நோட்டுகள் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்துக்கு வந்து விட்டன.இந்நிலையில் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1 லட்சத்து, 92 ஆயிரத்து, 283 மாணவ, மாணவியருக்கு பாட புத்தகம், நோட்டுகள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படவுள்ளது. இதனால் ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் இருந்து, பள்ளிகளுக்கு நோட்டுகள், பாட புத்தகம் அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது. இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் இருந்து நடுநிலை பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ