உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 320 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 19௨-201.69 ரூபாய், இரண்டாம் தரம், 128.88 - 193.09 ரூபாய் என, 14,918 கிலோ கொப்பரை தேங்காய், 27 லட்சத்து, 75,752 ரூபாய்க்கு விலை போனது.* ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்றிரவு வரை ஜவுளி சந்தை நடந்தது. கோவில் விழா, பண்டிகை குறைவு என்பதால் சில்லறை விற்பனை மந்தமாக நடந்தது. அதேசமயம் குளிர், மழைக்கான ஆடை, காட்டன் துணி, துண்டு, பெட்ஷீட், பெட்ஸ்பிரட், போர்வை, உள்ளாடை, வேட்டி, லுங்கி, நைட்டி, குழந்தைகளுக்கான ஆடைகளின் சில்லறை விற்பனை ஓரளவுக்கு நடந்தது என்று, வியாபாரிகள் தெரிவித்தனர்.* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த பாக்கு ரக ஏலத்தில், பாக்கு (பச்சை), குறைந்த விலை (கிலோ), 40 ரூபாய், அதிகவிலை, 50 ரூபாய்க்கும் விற்றது.பாக்கு (உலர்ந்தது) ஒரு கிலோ, 175 ரூபாய் முதல் 188 ரூபாய் வரை விற்றது. பாக்கு (பழம்) குறைந்தவிலை, 64 ரூபாய் முதல் 68 ரூபாய்க்கு விற்றது. சாலி ரகம் பாக்கு சராசரியாக கிலோ, 320 ரூபாய், ஆப்பி பாக்கு சராசரியாக, 375 ரூபாய்க்கும் விற்றது. * ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நடந்தது. தென்னங்கருப்பட்டி, 550 கிலோ வரத்தாகி, கிலோ 135 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை கூடுதலாக விற்பனையானது. வரத்தான அனைத்து தென்னங்கருப்பட்டியும், 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் முடிந்ததால், 24வது வாரமாக பனங்கருப்பட்டி வரத்தாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி