உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பலியான பள்ளி வேன் டிரைவர் குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்

பலியான பள்ளி வேன் டிரைவர் குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்

காங்கேயம்: காங்கேயம், அய்யாசாமி நகர் காலனி, சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன். வெள்ளகோவில், அய்யனுார் அருகே தனியார் பள்ளி வேன் டிரைவராக பணிபுரிந்தார். இரு நாட்களுக்கு முன் பள்ளி குழந்தைகளுடன் சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டது.வாகனத்தை பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியதால் குழந்-தைகள் தப்பினர். அதேசமயம் சேமலையப்பன் இறந்து விட்டார். இந்நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், சேமலை-யப்பன் வீட்டுக்கு நேற்று வந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். சேமலையப்பன் உருவப்-படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை