உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க உத்தரவு

ஈரோடு:தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க விடுதி, திருமண மண்டபம், அச்சக உரிமையாளர்களுக்கு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி திருமண மண்டபம், கூட்ட அரங்க உரிமையாளர், வெளியூரில் இருந்து வந்து தங்க அனுமதிக்கக்கூடாது. கூட்டமாக தங்கவோ, செயல்படவோ கூடாது. திருமணம், சுப நிகழ்ச்சிகள் தவிர வேறெந்த அரசியல் தொடர்புடைய கூட்டங்களும் நடத்த பதிவு செய்யப்பட்டிருந்தாலோ, சுப நிகழ்ச்சி பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருள் வழங்குவது, புடவை, வேட்டி வழங்குவது, உணவு பொட்டலம் வழங்குவது, சாப்பாடு பந்தி பரிமாறுதல் கூடாது. அவ்வாறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.தவிர, அரசியல் கட்சி தலைவர்களின் பெயர், உருங்கள் பொறித்த தட்டிகள், கட் அவுட், பேனர், அலங்கார வளைவுகள் வைத்து அனுமதியின்றி ஓட்டு சேகரித்தால், அதன் விபரத்தை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்க தெரிவிக்க வேண்டும். பரிசு பொருட்கள், மொத்தமாக இருப்பு வைக்கும் பொருட்களுக்கு அனுமதிக்கக்கூடாது. விடுதிகளில் தங்குவோர் ஆதார் அட்டை, அடையாள நகல்களை சரி பார்த்து அனுமதிக்க வேண்டும். தேர்தல் குறித்த புகாரை, 24 மணி நேரமும், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, 1800 425 0424, 0424 2267672 போன்ற எண்களிலும், சி-விஜில் செயலி மூலம் தெரிவிக்கலாம். விதி மீறினால் தேர்தல் நடத்தை விதிப்படி, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை