உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு மருத்துவமனையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு பூஜை

அரசு மருத்துவமனையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு பூஜை

ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. ஈரோடு ஜி.ஹெச். வளாகத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் செயல்பட்டது. 2016ல் போலீஸ் ஸ்டேஷனாக அறிவிக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனை எஸ்.ஐ., நிர்வகித்தார். டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஜி.ஹெச் ஸ்டேஷன் பணிகளை வழிநடத்தினார். இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் கட்டி கொள்ள மருத்துவமனை நிர்வாகம் இடத்தை முறை ப்படி ஒதுக்கியது. இதற்கான அடிக் கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா, தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் மோகன கவிதா, பொறியாளர் வேல்முருகன், இளநிலை பொறியாளர் ஆனந்த ராமன் மற்றும் போலீசார் பங்கேற்றனர். புதிய கட்டடம் கட்டும் இடத்தில் இருந்த, இரு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. நாலேகால் சென்ட் நிலம் கட்டடம் கட்டி கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் சார்பில் பணிகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை