உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனத்துறை செக்போஸ்டில் சடலத்துடன் போராட்டம்

வனத்துறை செக்போஸ்டில் சடலத்துடன் போராட்டம்

பவானிசாகர், ஆசனுார் அருகே காளிதிம்பம் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள், 80; கணவர் இறந்துவிட்ட நிலையில் பவானிசாகர் அருகே காராச்சிகொரையில் மகன் ஜடையன் வீட்டில் வசித்தார். வயது மூப்பால் இறந்த நிலையில், அவரது உடலை குல வழக்கப்படி பவானிசாகர் வனப்பகுதி தொட்ட கொம்பை மாரியம்மன் கோவில் பின்புறம் அடக்கம் செய்ய, நேற்று மாலை உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் காராச்சிகொரை வனத்துறை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்திய வனத்துறையினர் புலிகள் சரணாலய வன சட்டத்தின் படி, உடலை அடக்கம் செய்ய அனுமதி இல்லை என்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்படவே சடலத்துடன் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து வனத்துறையினர், மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர் அனுமதித்ததால் உடலை கொண்டு செல்ல வனத்துறையினரும் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை