உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 பேரை பலி வாங்கிய குவாரி; சட்டவிரோதமாக நடத்திய தம்பதி கைது

2 பேரை பலி வாங்கிய குவாரி; சட்டவிரோதமாக நடத்திய தம்பதி கைது

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சி, டி.என்.பாளையம் வனசாலையில், பெருந்துறை அருகேயுள்ள கவுண்டச்சிபாளையம், தாசநாய்க்கனபாளையத்தை சேர்ந்த லோக-நாதன் மனைவி ஈஸ்வரிக்கு, 65, சொந்தமான கல் குவாரி, ஸ்டார் புளூ மெட்டல்ஸ் பெயரில் செயல்பட்டது. இதற்கான உரிமம், 2015ம் ஆண்டே முடிந்த நிலையில், சட்ட விரோதமாக இயங்கி வந்தது.இரு நாட்களுக்கு முன் இரவில் குவாரியில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறைகளை வெடி வைத்து உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வெடி வெடித்ததில், கோபி, குருமந்துர், பூசாரியூரை சேர்ந்த செந்தில்குமார், 50; பர்கூர், கர்கேகண்டியை சேர்ந்த அஜித்-குமார், 27, உடல் சிதறி பலியாகினர்.இது தொடர்பாக குவாரி உரிமையாளர் ஈஸ்வரி, அவரது கணவர் லோகநாதன், மேனேஜர் செல்வம் மீது, பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மூவரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மூவரையும் கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ