உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி, அந்தியூர் தொகுதியில் சிக்கிய ரூ.௪.௭௫ லட்சம்

கோபி, அந்தியூர் தொகுதியில் சிக்கிய ரூ.௪.௭௫ லட்சம்

கோபி கோபி அருகே வெள்ளாளபாளையத்தில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர். நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த டாடா கோல்டு என்ற காரில், கோபியை சேர்ந்த மூர்த்தி வந்தார். அவரிடம், 1.16 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் அந்தியூர், அண்ணாமடுவில், தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில், சரக்கு வாகனத்தில் வந்த ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்த சத்யாநாராயனிடம், 56 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.* பர்கூர் அருகே, அந்தியூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரை சேர்ந்த வீராசாமியிடம், 61,200 ரூபாய் சிக்கியது. இதேபோல் ஆசனுார் அருகே அரேபாளையம் பிரிவில், ஈச்சர் வேனில் வந்த கனகன் என்பவரிடம், 2.50 லட்சம் ரூபாயை, ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை