உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.29.70 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.29.70 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ஈரோடு:ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 833 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் விற்பனைக்கு வந்தது.முதல் தரம் ஒரு கிலோ, 81.20 ரூபாய் முதல், 88.10 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 54.88 ரூபாய் முதல், 75.60 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 37,369 கிலோ கொப்பரை, 29 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !