உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நட்டாற்றீஸ்வரருக்கு வரும் 14ல் சங்காபிஷேகம்

நட்டாற்றீஸ்வரருக்கு வரும் 14ல் சங்காபிஷேகம்

மொடக்குறிச்சி: தமிழ் புத்தாண்டு தினத்தில் நட்டாற்றீஸ்வரருக்கு, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மொடக்குறிச்சி, காங்கயம் பாளைத்தில் உள்ளது நட்டாற்றீஸ்வரர் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி ஆற்றின் நடுவே உள்ள கோவிலில், மணலால் ஆன லிங்கத்தை அமைத்து அகத்தியர் வழிபட்டதாக ஐதீகம். தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.,14ல் சிறப்பு பூஜை நடைபெறும். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர், தமிழ் புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர்.தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும், 13ல் மாலை விநாயகர் வழிபாட்டுடன் பூஜை துவங்குகிறது. பின்னர் ருத்ர பாராயணம், நட்டாற்றீஸ்வரருக்கு சாந்தாபிஷேகம் நடக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான வரும், 14 அதிகாலை 3:30 மணிக்கு 108 சங்கு ஸ்நபனம், ருத்ர பாராயண ஹோமங்கள் நடக்கிறது. காலை, 5:40 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை