உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சிலவரி செய்திகள்

ஈரோடு சிலவரி செய்திகள்

பட்டம் விடுவதால் மின்தடைமின்வாரியம் அறிவுறுத்தல்ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் உபகோட்டம், வீரப்பன்சத்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட திருநகர் காலனி, கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர், ராமமூர்த்தி நகர், சித்தன் நகர், கமலா நகர் பகுதிகளுக்கு, திருநகர் காலனி மின்பாதை வழியாக மின்னுாட்டம் அளிக்கப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் சிலர், மாலை நேரங்களில் பட்டம் விடுவதால், பட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நுால், மின் பாதையில் சிக்கி தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும், 19, 21, 22, 25 தேதிகளில் தொடர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்தடையால் வ.உ.சி., பூங்கா நீரேற்று நிலையத்துக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தெரிவித்துள்ளார்.தபால் ஓய்வூதியர் கூட்டம்ஈரோடு: தபால் துறை கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும், 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு ஈரோட்டில் நடக்க உள்ளது. ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை நேரில் அல்லது தபாலில் வரும், 15க்குள் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை