உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மீது கவிழ்ந்த கரும்பு லாரி 3 பேர் பலி; மூவர் படுகாயம்

கார் மீது கவிழ்ந்த கரும்பு லாரி 3 பேர் பலி; மூவர் படுகாயம்

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், தாளவாடி மலையில் இருந்து கரும்பு லோடு ஏற்றிய ஒரு லாரி, திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி வந்தது. அதே நேரம், சத்தி அடுத்த மூலக்கிணற்றைச் சேர்ந்த ஆறு பேர், 'மாருதி ஈக்கோ' காரில், திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் சென்று கொண்டிருந்தனர்.மலைப்பாதையில், 27வது கொண்டை ஊசி வளைவில், கரும்பு லோடு ஏற்றிய லாரி திரும்பிய போது, எதிர்பாராத விதமாக, மாருதி ஈக்கோ கார் மீது கவிழ்ந்து, காரை அப்பளமாக நசுக்கியது.அவ்வழியே சென்ற பிற வாகன ஓட்டிகள், அதிர்ச்சி அடைந்து, காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு, மனோகர், செல்வம், சுந்தர்ராஜ் ஆகியோரை படுகாயத்துடன் மீட்டனர். அவர்களை சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த சென்னையன், குமார், செல்வம் இடிபாட்டில் சிக்கி பலியாகினர். இந்த விபத்தால், திம்பம் மலைப்பாதையில், 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை